நெல்லை ஜான் முத்துNELLAI JOHN MUTHU
WhatsApp

சமூக ஆர்வலர் · சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி

மக்கள் பணத்திற்கு மக்கள் கணக்கு

உங்கள் ஊரின் பிரச்சினையைத் தேடுங்கள். மனு உதவி இலவசமாகப் பெறுங்கள். தாக்கல் செய்யப்பட்டவற்றின் நிலையைப் பாருங்கள்.

மேலப்புதுக்குடி பகுதி மக்களுடன் நெல்லை ஜான் முத்து — கிராமக் கூட்டம்
மேலப்புதுக்குடி கிராமக் கூட்டம் — 2026
35உள்ளாட்சி அமைப்புகள்
467பதிவு செய்யப்பட்ட பிரச்சினைகள்
₹0சேவைக் கட்டணம்
10ஆண்டுகள் ஐரோப்பாவில்

சேவைகள்

உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?

நான்கில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எல்லாமே இலவசம்.

நெல்லை ஜான் முத்து மக்கள் சேவை மையம், புதுக்குடி — மனு எழுதித் தரும் பணி
நெல்லை ஜான் முத்து மக்கள் சேவை மையம், புதுக்குடி

மக்கள் சேவை மையம்

மேலப்புதுக்குடி

மனு எழுதத் தெரியவில்லை என்பதற்காக உரிமையை விட்டுவிடக் கூடாது. சொன்னதைக் கேட்டு நானே எழுதுகிறேன், படித்துக் காட்டுகிறேன், பிறகுதான் கையெழுத்து.

  • மனு எழுதித் தருதல் — ஆட்சியர், வட்டாட்சியர், BDO, மின்வாரியம், வருவாய்த் துறை.
  • அரசுத் திட்ட விண்ணப்பம் — பட்டா, வீட்டு வசதி, ஓய்வூதியம், சுய உதவிக் குழு கடன், கல்வி உதவித்தொகை.
  • தகவல் அறியும் உரிமை — RTI விண்ணப்பம் தயாரித்துத் தருதல்.

மேலப்புதுக்குடி, புதுக்குடி, சேரன்மகாதேவி ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம்.

பணிப் பதிவு

சொன்னது அல்ல. செய்தது.

ஒவ்வொரு மனுவுக்கும் அலுவலக ஒப்புகைச் சீட்டு உண்டு. கேட்டால் காட்டுவேன். நிலுவையில் இருப்பதை நிலுவை என்றே எழுதியிருக்கிறேன்.

திறந்த கிணறு பாதுகாப்பு — மேலப்புதுக்குடி

குழந்தைகள் நடமாடும் இடத்தில் மூடப்படாத கிணறு. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலருக்கு அவசர மனு.

நிலுவையில்

சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி — உப்பார கூலனி

பழுதடைந்த குடிநீர்த் தொட்டி. விழும் அபாயம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

நிலுவையில்

மின் இணைப்பு மறுப்பு — புதுக்குடி

2013–14 முதல் மின்சாரம் இல்லாத வீடு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மின் நுகர்வோர் உரிமை விதிகள் 2020 அடிப்படையில் 17 பக்க மனு.

நிலுவையில்

மகளிர் சுய உதவிக் குழு — வடக்கு கருக்குறிச்சி

நடைமுறை மூலதனத் திட்டங்கள், அனுபவச் சான்றிதழ், வங்கி இணைப்பு — முழு வழிகாட்டுதல்.

முடிந்தது

ஊர் வாரியாக

உங்கள் ஊரில் என்ன நிலுவையில் இருக்கிறது?

அம்பாசமுத்திரம் தொகுதியின் 35 நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு 467 பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுத் தளங்கள், டெண்டர் ஆவணங்கள், நகர்மன்றக் குறிப்புகள், நீதிமன்ற மற்றும் NGT பதிவுகள், செய்தி அறிக்கைகள், நேரடிக் கள ஆய்வு — இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.

குடிநீர், சாலை, வடிகால், விவசாயம், தெருவிளக்கு, கல்வி என வகை வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை.

119சாலை & போக்குவரத்து
86குடிநீர்
71வடிகால் & கழிவு
44விவசாயம் & நீர்நிலை

என்னைப் பற்றி

பத்து ஆண்டுகள் ஐரோப்பாவில். இப்போது சொந்த ஊரில்.

மலையான்குளத்தில் பிறந்தேன். புதுக்குடியில் குடும்பம். நெதர்லாந்திலும் இத்தாலியிலும் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தேன்.

அங்கே ஒரு விஷயத்தைக் கவனித்தேன். மக்கள் கட்டும் வரிப்பணம் எங்கே போகிறது என்பதை அந்த நாட்டு மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கேள்வி கேட்டால் பதில் வரும், கால அவகாசமும் இருக்கும்.

நம் ஊரில் மனு கொடுத்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அது நம் மக்களின் குறை அல்ல — யாரும் சொல்லித் தரவில்லை. அதைச் சொல்லித் தருவதற்காகத் திரும்பி வந்தேன்.

சேவை விதிகள்

மக்களிடம் ஒரு ரூபாய் கட்டணம் இல்லை.

கட்சிப் பாரபட்சம் இல்லை. மனு ஒரு உரிமை, உதவி அல்ல.

ரசீது இல்லாத மனு இல்லை.

மனு கொடுத்தவர்களின் விவரம் எந்த அரசியல் தேவைக்கும் பயன்படுத்தப்படாது.